தாம்பத்ய அகராதி



- அலுவலகம்: வேலை செய்யும் போது நரகமாகவும், வீட்டுக்கு வந்தவுடன் சொர்க்கமாகவும் தோன்றும் இடம்!

- ஆட்டுக் கல்: மனைவியை ஆட்டிப் படைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படுகிறதா? உடனே, அதன் அருகில் போய் அமருங்கள். ஊற வைத்திருக்கும் அரிசி, உளுந்தைக் கரகரவென்று ஆட்டி, ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளுங்கள்!

- இரு சக்கர வண்டி: தாம்பத்யம் என்பது சைக் கிளைப் போல. நீங்கள் முன் சக்கரம்; உங்கள் மனைவி பின் சக்கரம். முன் சக்கரம் முன்னால் நின்று இப்படி, அப்படி அசைந்து கம்பீரமாகக் காட்சியளித்தாலும், அதை உந்தித் தள்ளுவது பின் சக்கரம் தான். பின் சக்கரம் இயங்காவிட்டால், முன் சக்கரத்திற்கு வேலையே இல்லை.

- கல்யாணமான புதிதில் இப்படி நிற்பவன், கடைசி வரை இப்படி நிற்க வேண்டியது தான்.

- "உயிரொப்பந்தம்' எனப் படும் ஆயுள் இன்சூரன்ஸ்: உங்கள் ஆயுளை இன்ஷூர் செய்து, பாலிசியில், "நாமினி' பெயரைப் பூர்த்தி செய்யாமல் விட்டு வையுங்கள். மனைவி கொஞ்சம் இடக்கு பண்ணும் போது, "நாமினி' என்று சொல்லிப் பாருங்கள். மந்திர சக்திக்குக் கட்டுப்பட்ட நல்ல பாம்பாகி விடுவார்.

- ஊமை: தொணப்புகிறவர்களை ஓரளவுக்கு வழிக்கு கொண்டு வரலாம். ஊமை போல், "உம்' மென்று இருக் கிறதுகளிடம்தான் எச் சரிக்கை தேவை.

- எலிப்பொறி: குடும்ப வாழ்க்கைக்கு மறு பெயர்.

- ஏய்: இருக்கும் போதே தீர்ந்து விட்டதென்று சொல்லி, பணம் வாங்கி ஏய்க்கிறாளே என்று மனைவி மேல் குறைபட்டுக் கொள்வதில் நியாயம் இல்லை. நீங்கள் தானே, "ஏய், ஏய்...' என்று அவளுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்.

- ஐன்ஸ்ட்டீன்: "ரிலேடிவிட்டி தியரி'யைக் கண்டுபிடித்தவர். இன்னொருவன் மனைவியின் ரிலேடிவ்களைப் போற்றியும், தன் மனைவியின் ரிலேடிவ்களைத் தூற்றியும் எவன் பழகுகிறானோ, அவன் வாழத் தெரியாதவன்.

- ஒரு முழம்: இதற்கு அநேக அர்த்தங்கள் உண்டு; விளக்கம் தேவையில்லை.

- ஓமத் திராவகம்: எந்த மனிதனுக்கும் தன் வாய்க்கு ருசியாய் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இல்லாமலிருக்குமா? நீங்கள் விரும்பிய ஹோட்டலுக்குப் போய் பிடித்ததை எல்லாம் ஆனந்தமாகச் சாப் பிடுங்கள். வீட்டுக்குள் நுழையும் போது வயிற்றை பிடித்துக் கொண்டு, முகத்தை சுளித்து, "சாப்பாடா அது? அது என்னமோ, உன் சமையலை சாப்பிட்டு பழகிட்டு, வேற எங்காவது சாப்பிட்டா ருசியாகவும் இல்லே; வயித்தையும் என்னவோ பண்ணுது. கொஞ்சம் ஓமத் திராவகம் கொடேன்...' என்ற வசனத்தை உணர்ச்சிகரமாக பேசுவீர்கள்.

ஒள - ஒளவையார்: "கூறாமல் சன்யாசம் கொள்!' என்று உபதேசித்த தமிழ்ப் பெருமாட்டி.

2 கருத்துகள்:

Thamiz Priyan சொன்னது…

:))))

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

//ஒள - ஒளவையார்: "கூறாமல் சன்யாசம் கொள்!' என்று உபதேசித்த தமிழ்ப் பெருமாட்டி. //

ஏன்னே இதப்போயி மொக்கைலிஸ்ட்ல சேர்த்திவிட்டீங்க