தமிழனின் தலையாகிய பிரச்சனை. - கொஞ்சம் பெருசு தான்



இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக அதை நாடாளுமன்றத்தில் அதிபர் புஷ் தாக்கல் செய்துள்ளார். கூடவே அவர் அனுப்பியுள்ள கடிதம்தான் இது.

புஷ் கூறியுள்ளதன் சாராம்சம் என்னவென்றால், எரிபொருளை தொடர்ந்து வழங்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு இல்லை. அது நினைத்தால் எரிபொருள் சப்ளையை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ள முடியும். அதை இந்தியா ஏன் என்று கேட்க முடியாது. சட்டப்பூர்வமாக எந்த நடவடிக்கையிலும் இந்தியாவால் ஈடுபட முடியாது என்பதே.

ஆனால் இந்தியாவில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து சொல்லும் ஒரு முக்கியமான வாதம்
123 ஒப்பந்தத்தில் எந்தக் காரணத்திற்காகவும் எரிபொருள் சப்ளை பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதற்கிடையே, என்.எஸ்.ஜி. அமைப்பு தன் பங்குக்கு இன்னொரு குண்டைப் போட்டுள்ளது. இந்தியாவின் அணு வர்த்தகத்திற்கு அனுமதி அளித்துள்ள என்.எஸ்.ஜி., இந்தியாவுக்கு நவீன அணு தொழில்நுட்பங்கள் எதையும் வழங்குவதில்லை என்று தீர்மானித்துள்ளது. இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி யுரேனியம் செறிவூட்டுவது உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவதில்லை என்று என்.எஸ்.ஜி தீர்மானித்துள்ளது. இந்தியாவுக்கு சலுகை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகளிடம் இதைக் கூறித்தான், என்.எஸ்.ஜி. சமாளித்ததாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் புஷ் கடிதமும், என்.எஸ்.ஜியின் முடிவும் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. (நன்றி - தட்ஸ் தமிழ்)

இதெல்லாம் போதாதுன்னு நாம க்ரிடிச விமர்சகர் ஞானி வேற இந்த வாரம் ஒ மம்மி ரேடுர்ன்ஸ் கிழினு கிழிசிருகாறு.

அவர் சொன்ன சில விஷயங்கள் அழமாக கவனிக்கப்பட வேண்டியவை.

அணு உலை என்பது சோப்பு, செல்போன் தயாரிப்பு மாதிரி விஷயம் அல்ல. மின்சாரம், அணுகுண்டு கூடவே, பல தலைமுறைகளுக்கும் அழியாத கதிர்வீச்சு ஆபத்துள்ள கழிவுகளை உற்பத்தி செய்யும் தொழில் இது. கடுமையான கண்காணிப்பு, கடுமையாக விதிகளைப் பின்பற்றுதல் இல்லாமற் போனால் பெரும் ஆபத்து நமக்குக் காத்திருக்கிறது. கடுமையாக விதிகளை அமல்படுத்துவதோ இந்தியாவில் நடக்காது என்பதுதான் கருணாநிதி, ஜெயலலிதா, ராஜீவ், லாலு வகையறாக்களிடம் நாம் அறிந்திருக்கும் பாடம். 25 ஆயிரம் வருடங்களில் உருவான ஆற்று மணலை 25 வருடங்களில் தமிழக ஆட்சிகள் காலி பண்ணிவிட்டன. தோல், சாயக்கழிவுகள் பெரிய ஆறுகளையே சாக்கடைகளாக்கிவிட்டன.


இங்கே விதிகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எல்லாமே ஏட்டளவில்தான். இப்படிப்பட்ட ஊழல் தேசத்தில் அணு உலை போன்ற நெடுங்கால ஆபத்துள்ள தொழில்களை தனியாரிடம் கொடுத்தால், அரசியல்வாதிகளின் ரேட் உயரும் என்பதைத் தவிர வேறு எதுவும் நடக்காது. இப்போது இந்தியா உலகத்தின் குப்பைத்தொட்டி; அடுத்து விஷக் கிடங்கு !



இதனால் மக்கள் வாழ்க்கையில் எந்த வளமும் வராது. கதிர்வீச்சு வரலாம். நம் சந்ததிகளுடன் சேர்ந்து தேசத் துரோகிகளின் சந்ததிகளும் அழிவார்கள் என்பதுதான் ஒரே ஆறுதல். ஏனென்றால், கதிர்வீச்சுக்கு லஞ்சம் கொடுத்து என் பேரன் பேத்திகளை மட்டும் விட்டுவிடு என்று சொல்ல முடியாது. ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்திய ஊழல் பெருச்சாளிகளின் பல லட்சம் கோடி ரூபாய் பணத்தால், அழிக்கப்பட்ட இயற்கையை - சுற்றுச் சூழலை ஒரு போதும் மீட்டுத் தரமுடியாது. (நன்றி - குமுதம் மற்றும் குற்றாலச்சாரல் ).

ஆனாலும் இதுக்கெல்லாம் தமிழன் பயன்துடுவான, விஜயகாந்தயே நாம பெரும்தன்மையோட ஏத்துகிட்டோம். இந்த அணு விசயமெல்லாம் ஜுஜுபீ. எல்லாரும் சொல்லற மாதிரி தமிழன் வந்தாரை வாழ வைப்பவன். அதனால இதுவும் தான் வந்துட்டு போகட்டும்.

ஆனா ஒரு சராசரி தமிழன்னோட பிரச்சனையே வேற.

இன்னைக்கு எந்த கட்சி மாநாடு நடத்துது. அதுல என்ன சரக்கு கேட்கும். புல்லா இல்ல ஆப் தான் கெடைக்குமா.

இன்னைகி மான்ஆட மயிலாட நிகழ்ச்சியில என்ன பிரச்சனை வரும். ஆடுற பிள்ளைங்க எல்லாம் நல்ல ஆடுமா?

தினமலர் - சன் டிவி பிரச்சனை என்ன ஆச்சு?.

கோலங்கள்அபிக்கு இன்னும் என்ன என்ன பிரச்சனை எல்லாம் வருமோ ?.

சரத்குமார் பொண்ணு சிம்பு கூட நடிக்குமா ?. சிம்பு மீண்டும் நயன் கூட சேருவாரா ?.

தலையோட அடுத்த படம் ஏகன் ஹிட் ஆகுமா?.

இப்படியே இன்னும் எவ்வளவோ தலையாகிய பிரச்சனை எல்லாம் இருக்கு.

இப்படிக்கு
வாய்கிழிய பேச மட்டுமே தெரிஞ்ச ஒரு தமிழன்.













1 கருத்து:

அத்திரி சொன்னது…

தமிழனின் உண்மை நிலைமையை இப்படி போட்டுத் தாக்கலாமா?.