மலேசியாவில் பாரதிராஜா மகள் திருமணம்

16 வயதினிலே படத்தில் பணியாற்றிய சாதனையாளர்கள் ரஜினி, கமல், இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்ட சாதனையாளர்களுக்கு விருந்து கொடுத்து கெளரவிக்கிறார் இயக்குனர் பாரதிராஜா, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு!.

பாரதிராஜாவின் மகள் ஜனனி ஐஸ்வர்யா-ராஜ்குமார் தம்பிராஜா திருமணம் இன்று மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் கிரவுன் பிளாசா முத்தியரா ஹாலில் நடக்கிறது. மலேஷிய அரசியல் பிரமுகர்கள் டத்தோ சாமிவேலு உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, கஙஅகை அமரன், பஞ்சு அருணாச்சலம், வைரமுத்து, சரத்குமார், நெப்போலியன் போன்ற திரையுலகப் பெரும் புள்ளிகள் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்க நேற்று இரவே மலேஷியா புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

திருமணம் முடிந்த அடுத்தநாள் மாலை ஓட்டல் இஸ்தானாவில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் பாரதிராஜா.

இதில் தன் முதல் படத்தின் நாயகர்களான சூப்பர்ஸ்டார் ரஜினி-கமல், இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்டோருக்கு சிறப்பு விருந்து தருகிறார்.

"இது எங்கள் 30 ஆண்டுகால நட்புக்கு ஒரு சின்ன மரியாதை. கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு திரைக் கலைஞர்கள் அனைவரும் ஒரே குடும்பம்தான் என்பதை நிரூபிக்கத்தான் இந்த விருந்து..." என்கிறார் பாரதிராஜா.

2 கருத்துகள்:

சரவணகுமரன் சொன்னது…

அதையும் டிவி'ல போட்டு காசு பண்ண போறாங்களா?

சரவணகுமரன் சொன்னது…

சொல் சரிபார்ப்பு - தூக்கிடலாமே...